ADDED : ஜூன் 23, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில இளைஞர் காங்., சார்பில் 'நீட்' தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டடத்தில் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மகிளா காங்., தலைவி பஞ்சகாந்தி, மாநில நிர்வாகிகள் மருது பாண்டியன், திருமுருகன், மோகன்தாஸ், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.