/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வயநாட்டில் பலியானவர்களுக்கு இளைஞர் காங்., மவுன அஞ்சலி
/
வயநாட்டில் பலியானவர்களுக்கு இளைஞர் காங்., மவுன அஞ்சலி
வயநாட்டில் பலியானவர்களுக்கு இளைஞர் காங்., மவுன அஞ்சலி
வயநாட்டில் பலியானவர்களுக்கு இளைஞர் காங்., மவுன அஞ்சலி
ADDED : ஆக 05, 2024 04:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில், வயநாடு பேரிடரில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலியும், இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி இளைஞர் காங்., செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதற்கு இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.
வயநாடு பேரிடரில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, செயற்குழு கூட்டத்தில், லோக்பசா தேர்தலில் வைத்திலிங்கம் எம்.பி.,யின் வெற்றிக்கு இரவும் பகலும் உழைத்த இளைஞர்., காங் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மாநில பட்ஜெட் பெரும் ஏமாற்றமாக அமைந்ததையும், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தும் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ அரசை கண்டித்தும், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளையும், முதல்வரையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வயநாடு பேரிடரில் இறந்தவர்களுக்கு இரங்கல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.