ADDED : பிப் 22, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் வேன் மோதி பைக்கில் சென்றவர் இறந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடி மீனவர் தெருவை சேர்ந்தவர் தனபால் மகன் ராஜேஸ்வரன், 21; இவர், கடந்த 10ம் தேதி, தனது நண்பர் தர்னகணபதியுடன், காரைக்கால் பாரதியார் சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது, அதிவேகமாக வந்த மாருதி வேன் மோதியதில், ராஜேஸ்வரன், தர்னகணபதி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இருவரும், தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் ராஜேஸ்வரன் உயிரிழந்தார்.
விபத்து குறித்து, நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

