ADDED : மே 03, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பைக் கவிழந்து வாலிபர் இறந்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த பேரளம், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மகன் பிரகாஷ், 18; பேரளத்தில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி நள்ளிரவு காரைக்காலுக்கு பிரகாஷ் பைக்கில் சென்றார்.
திருநள்ளாறு அம்பகரத்துார் சாலையில், வேளாண் அறிவியல் நிலையம் அருகில் வேகமாக சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழந்தது. இதில், படுகாயமடைந்த பிரகாைஷ காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
