தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் வாலிபர் பலி  வேப்பூரில் பரிதாபம்

விபத்தில் வாலிபர் பலி  வேப்பூரில் பரிதாபம்

விபத்தில் வாலிபர் பலி  வேப்பூரில் பரிதாபம்


ADDED : ஜூன் 11, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: வேப்பூர் மேம்பால தடுப்புக்கட்டையில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை, கீழ்பாக்கத்தை சேர்ந்தவர்கள் வேலன் மகன் விக்னேஷ், 24; விஜயகுமார் மகன் விஷ்வா, 24; நண்பர்களான இருவரும் வெவ்வேறு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு

கே.டி.எம்., உயர் ரக பைக்கில், மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்ரோடு மேம்பாலத்தில் நேற்று காலை 6:00 மணிக்கு வந்தபோது, பைக் நிலை தடுமாறி, சாலையோர தடுப்பு கட்டையில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கை ஓட்டி வந்த விக்னேஷ் பலத்த காயமடைந்து, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த விஷ்வா, கால்கள் முறிந்த நிலையில் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை உட்பட பெருநகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வார இறுதி விடுமுறை நாட்களில் புதுச்சேரி, சேலம், மூணாறு, ஒகேனேக்கல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அவர்கள், கே.டி.எம்., போன்ற அதிவேக திறன் கொண்ட பைக்குகளில் செல்வதால், கண் சிமிட்டும் நேரத்தில் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us