/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி புராஜெக்ட்டுக்கு ரூ.1 லட்சம் பரிசு
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி புராஜெக்ட்டுக்கு ரூ.1 லட்சம் பரிசு
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி புராஜெக்ட்டுக்கு ரூ.1 லட்சம் பரிசு
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி புராஜெக்ட்டுக்கு ரூ.1 லட்சம் பரிசு
ADDED : அக் 23, 2024 04:50 AM

புதுச்சேரி : கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி, சிறந்த புராஜெக்ட்டுக்கான, ரூ. 1 லட்சம் பரிசு வென்றது.
சென்னையில் மாநில அளவில், 'நான் முதல்வன் நிரல் திருவிழா' ேஹக்கத்தான் போட்டி நடந்தது. இதில், 290 பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்றன. இந்த போட்டியில், 205 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம், 8 ஆயிரத்து 486 புராஜெக்ட்டுகள் பெறப்பட்டன.
அதில் இருந்து, 1,000 புராஜெக்ட்டுகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இறுதியாக, 1,000 புராஜெக்ட்களில் இருந்து சிறந்த, 50 புராஜெக்ட்டுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு, ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
இந்த பரிசை, விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம், ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி வென்றது. அந்த கல்லுாரியின் சிவில் இன்ஜினியரிங் மாணவர் சந்துரு தலைமையில், மாணவர்கள் பொற்கோ, பிரவீன்குமார், கோகுல் ஆகியோர் ஒரு அணியாக செயல்பட்டு, 'கட்டுமானத்துறையில் கார்பன் உமிழ்வை தணிக்க கூடுதல் கட்டுமான பொருள் கையகப்படுத்தும் செயலி உருவாக்குதல்' என்ற தலைப்பில், புராஜெக்டை உருவாக்கி இருந்தனர்.
இதற்கு பேராசிரியை பிரியங்கா வழிகாட்டியாக இருந்தார்.
இந்த போட்டியில், வெற்றி பெற்ற மாணவ குழுவினரை, கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், கல்லுாரி முதல்வர் மகேந்திரன், அகாடெமிக்ஸ் டீன் கனிமொழி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

