/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூதாடிய 10 பேர் கைது ரூ.2 லட்சம் பறிமுதல்
/
சூதாடிய 10 பேர் கைது ரூ.2 லட்சம் பறிமுதல்
ADDED : டிச 02, 2025 04:34 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து, ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு அறைகளில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகரை சேர்ந்த ஆனந்த், 39; லாஸ்பேட்டை, சண்முகா நகரை சேர்ந்த செந்தில்குமார், 42; முதலியார்பேட்டை, தேங்காய்திட்டு, புதுநகரை சேர்ந்த குமாரதேவன், 20; லாஸ்பேட்டை, அணைக்கரை மேட்டை சேர்ந்த வைத்தியநாதன், 47; வம்பாகீரப்பாளையம், முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பாலு மகன் முரளி, 25; கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சந்துரு, 32; சங்கர் மகன் முரளி, 33; ஆலங்குப்பம் சஞ்சீவி நகரைச் சேர்ந்த ரஞ்சித், 28; கோவிந்தசாலை, அந்தோணியர் கோவில் வீதியை சேர்ந்த சேவியர், 34; லாஸ்பேட்டை, குமரன் நகரை சேர்ந்த நிர்மல்குமார், 29; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 10 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிந்து, அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 790, 10 மொபைல் போன்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

