தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூதாடிய 10 பேர் கைது ரூ.2.39 லட்சம் பறிமுதல்

 சூதாடிய 10 பேர் கைது ரூ.2.39 லட்சம் பறிமுதல்

 சூதாடிய 10 பேர் கைது ரூ.2.39 லட்சம் பறிமுதல்


ADDED : பிப் 17, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து, ரூ. 2.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை, 100 அடி சாலை, ஜான்பால் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்த அருள் (எ) ஆறுமுகம்,55; பிரகாஷ் சங்கர்,37; லாஸ்பேட்டை ஓம்சக்தி நகரை சேர்ந்த சரவணன்,47; திலாஸ்பேட்டை வீமன் நகரை சேர்ந்த ஜெயசங்கர்,58; வில்லியனுார் பாரதிதாசன் நகரை சேர்ந்த அழகர்,43; திருவெண்ணைநல்லுார், எரலுாரைச் சேர்ந்த மலைமன்னன்(எ)ராஜேஷ், 42; கரையாம்புத்துாரைச் சேர்ந்த அய்யப்பன், 48; வானுார் ராயப்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன்,54; கடலுார் வண்டிப்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்த கோபால்,33; விழுப்புரம் சிறுவந்தாடு, மாந்தோப்பு வீதியை சேர்ந்த கிருஷ்ணராஜ், 38; என்பது தெரியவந்தது. போலீசார் 10 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us