/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.ஐ.டி.,க்கு 100 ஏக்கர் நிலம்; என்.ஆர்., பேரவை கோரிக்கை
/
ஐ.ஐ.டி.,க்கு 100 ஏக்கர் நிலம்; என்.ஆர்., பேரவை கோரிக்கை
ஐ.ஐ.டி.,க்கு 100 ஏக்கர் நிலம்; என்.ஆர்., பேரவை கோரிக்கை
ஐ.ஐ.டி.,க்கு 100 ஏக்கர் நிலம்; என்.ஆர்., பேரவை கோரிக்கை
ADDED : செப் 24, 2024 12:12 AM
புதுச்சேரி : சென்னை ஐ.ஐ.டி.,க்கு 100 ஏக்கர் நிலத்தினை அரசு ஒதுக்க வேண்டும் என என்.ஆர்.,இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை ஐ.ஐ.டி., யானது புதுச்சேரியில் சர்வதேச ஆராய்ச்சி பூங்கா நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதன்படி 100 ஏக்கர் நிலத்தை தங்கள் வசம் இலவசமாக வழங்குமாறு சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகம் தரப்பில் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, ஐ.ஐ.டி., நிறுவனத்திற்கு சேதராப்பட்டு பொருளாதார மண்டலத்தில் 100 ஏக்கர் நிலத்தினை அரசு ஒதுக்கி, அந்த நிறுவனத்தை புதுச்சேரிக்கு கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் மாநிலத்தின் அபரீத வளர்ச்சிக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.