ADDED : ஜூலை 08, 2026 02:11 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது.
புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்தும், தொடர்ந்து வெப்பம் குறையாமல் இருந்து வருகிறது. வெயில் தாக்கத்தினால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் அடித்த நிலையில், நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது.
