/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10,000 ஜோதி விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம் கேரளா, கர்நாடகா அனுப்ப ஏற்பாடு

ADDED : அக் 05, 2024 11:12 PM

கேரளா, கர்நாடகாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக புதுச்சேரியில் பத்தாயிரம் ஜோதி விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி, துணி மற்றும் ரெடிமேட் ஆடைகள், பட்டாசுகள் மேலும் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் தயார் செய்து அனுப்பும் பணி பல மாநிலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.
வடமாநிலங்களில் தீபாவளி முதல் நாள் இரவு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். அதேபோன்று கேரளா மற்றும் கர்நாடகாவில் மண்ணால் செய்யப்பட்டு (எண்ணெய் ஊற்றி திரிவைத்து அல்லது மெழுகுவத்தி ஏற்றும் வகையிலும் இந்த விளக்கை பயன்படுத்தலாம்) பார்ப்பதற்கு சிம்னி விளக்கு தோற்றம் கொண்ட ஜோதி விளக்குகளை ஏற்றுவது வழக்கம்.
அதனையொட்டி கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு 10 ஆயிரம் ஜோதி விளக்குகள் செய்து தர புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தைச் சேர்ந்த டெரகோட்டா கலைஞர் சண்முகத்திற்கு ஆடர் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விளக்குகளை தயார் செய்து அனுப்பும் பணியில் சண்முகம் மற்றும் அவரது குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.