/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
/
புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ADDED : டிச 17, 2025 05:54 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில், 1 லட்சத்து 3,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 10 லட்சத்து, 21,578 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த நவ., 4 முதல் டிச., 11 வரை நடந்த சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு பின், தற்போது, 9 லட்சத்து 18,111 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம், 1 லட்சத்து 3,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில், 10 சதவீதம்.
அதில், இறந்தவர்கள் 20,798 பேர், இடம் மாறியோர் 80,645 பேர், பட்டியலில் இருமுறை இடம் பெற்றிருந்தவர், 2,024 பேர் ஆவர். தற்போதுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், 9.18 லட்சம் பேரில், 2002ல் வாக்களித்த ஆவணத்தை கண்டறிய முடியாத, 71,428 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள், 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

