தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து விதிமீறல் 10,592 பேருக்கு அபராதம்

 போக்குவரத்து விதிமீறல் 10,592 பேருக்கு அபராதம்

 போக்குவரத்து விதிமீறல் 10,592 பேருக்கு அபராதம்


ADDED : ஜூலை 02, 2026 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி முழுதும் கடந்த மாதம் போக்குவரத்து விதி மீறலில் ஈடுப்பட்ட 10,592 பேருக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரி முழுதும்போக்குவரத்து விதிகளை ஒழுங்குப்படுத்தும் வகையில், போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது. மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியது. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது. அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன் பயன்படுத்துதல் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய 10 ஆயிரத்து 592 பேருக்கு போக்குவரத்து போலீசார் அபாரதம் விதித்தனர்.

மேலும் சிறார்கள் வாகனம் ஓட்டியதாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இத்தகவலை போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us