UPDATED : அக் 31, 2026 11:50 PM
ADDED : அக் 31, 2026 11:46 PM

புதுச்சேரி: முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைமை அலுவலகத்தில், 107வது அமைப்பு தினத்தையொட்டி, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் அபிஷேகம் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். பொதுச் செயலாளர் அந்தோணி அமைப்பு தின உரையாற்றினார்.
இந்திய கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் நாரா கலைநாதன், எல்லை சிவகுமார், மாநில பொருளாளர் சுப்பையா, ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொருளாளர் துரை செல்வம், மாநிலத் துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், சேகர், மோதிலால் மாநில செயலாளர்கள் தயாளன், முத்துராமன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாத்திட உறுதி ஏற்கப்பட்டது.
