/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் மயமாகும் 108 ஆம்புலன்ஸ்கள்
/
தனியார் மயமாகும் 108 ஆம்புலன்ஸ்கள்
ADDED : ஜன 14, 2024 03:56 AM
அவசர மருத்துவ உதவிக்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் 108 ஆம்புலன்ஸ்கள் 15 இயங்குகின்றன. இதில், 50க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காலத்தில், கொரோனா நோயாளிகளை அரசு ஆம்புலன்ஸ்களில் ஏற்ற மறுத்தனர். உறவினர்கள்கூட அருகில் வர பயந்த காலத்தில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மட்டுமே, கொரோனா நோயாளிகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த ஆம்புலன்ஸ்கள், ரெட் கிராஸ் அமைப்பின் மூலமாக பராமரிக்கப்பட்டு, சம்பளம் வழங்கப்படுகிறது.ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் பாக்கி வைப்பதால், சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை அடிக்கடி முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர். இதனால், 108ஆம்புலன்ஸ் இயக்கத்தை தனியாரிடம் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இனி, தனியார் அமைப்பு மூலம்108 ஆம்புலன்ஸ் இயக்கப்பட உள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களை ரெட் கிராஸ் மூலம் இயக்கினால் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி செலவு ஆகிறது. இதுவே, தனியாரிடம் ஒப்படைக்கும்போது ரூ. 3.5 கோடிக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 108 ஆம்புலன்ஸ்களை இயங்கி வந்த டிரைவர்களின் நிலை பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளது.

