தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 பால்குட ஊர்வலம்

 108 பால்குட ஊர்வலம்

 108 பால்குட ஊர்வலம்


ADDED : ஜூலை 14, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்-: நயினார்மண்டபம் கடலுார் சாலையில் உள்ள நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு செடல் திருவிழாவையொட்டி, பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.

செடல் திருவிழாவையொட்டி, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் இரவில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

நேற்று பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து, நாகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாரானை நடந்தது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து, இன்று (14ம் தேதி) இரவு 7:00 மணிக்கு நாகமுத்து மாரியம்மன் அலங்காரத்துடன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (15ம் தேதி) இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து மரப்பாலம் குளத்தில் முளைப்பாரி கரைக்கும் வைபவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us