தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீவனுார் விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் 

தீவனுார் விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் 

தீவனுார் விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் 


ADDED : பிப் 28, 2024 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 07:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி சாரம் கோவிலில், தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 24ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடந்தது.

இதில் பங்கேற்க கடந்த 23ம் தேதி இரவு புதுச்சேரி வந்த செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணியசாமி, மேல்மலையனுார் அங்காளம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், அவ்வை திடலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாசி மகம் தீர்த்தவாரியில் பங்கேற்று திரும்பிய தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு, நேற்று சாரம் சித்தி புத்தி விஜய கணபதி கோவிலில் கணபதி ஹோமமும், 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது. இன்று (28ம் தேதி) சிறப்பு அபிேஷக ஆராதனையுடன் தீவனுார் பொய்யாமொழி விநாயகருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது.

ஏற்பாடுகளை மாசிமக வரவேற்பு குழு செய்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us