/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மது குடித்துவிட்டு ரகளை 11 பேர் கைது
/
மது குடித்துவிட்டு ரகளை 11 பேர் கைது
ADDED : ஜன 07, 2024 04:56 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்களில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுப்பட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில், புத்தாண்டு கொண்டாடத்தின்போது, வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கம்பெனியில் ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசினார். புதுச்சேரியில் நாட்டு வெடி குண்டு வீசுவது கலசாரமாக மாறி வருகிறது.
இதனிடையே சீனியர் எஸ்.பி., நாராசைத்தன்யா தலைமையில், போலீசார், நேற்று முன்தினம் இரவு தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் ரோந்து சென்றனர்.
தொடர்ந்து, நேற்று புதுச்சேரியில் பல்வேறு பொது இடங்களில் மதுகுடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதில், கோரிமேடு பகுதியில் மது குடித்து ரகளையில் ஈடுபட்ட காரைக்கால் ராமநாதன், 25; வில்லியனுார் கார்த்திக்ராஜா, 24; கோரிமேடு பிரேம்குமார், 23; திலாசுப்பேட்டை ஹானஸ்ராஜ், 31; அமுல்ராஜ், 28; ஆகியோரை கோரிமேடு கைது செய்தனர்.
மயிலம் சாலையில், மது குடித்துவிட்டு ரகளை செய்த வானுார் தமிழரசன், 27; என்பவரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் பொது மக்களுக்கு இடையூராக நடந்து கொண்ட முத்திரையர்பாளையம் வினாயகமூர்த்தி, 24; ரெட்டியார்பாளையம் செய்யது அகமது, 41; அரும்பார்த்தபுரம் பொன்னுரங்கம், 28; ஒதியஞ்சாலை அன்பரசன், 34; பூமியான்பேட்டை சரவணன், 47; ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.