தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 11 பேர்  கைது: 3.5 கிலோ பறிமுதல் 

 கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 11 பேர்  கைது: 3.5 கிலோ பறிமுதல் 

 கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 11 பேர்  கைது: 3.5 கிலோ பறிமுதல் 


ADDED : ஜன 10, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் அருகே கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்து, 3.5 கிலோவை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த வாதானுார் மின்துறை அலுவலம் அருகே பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தலைமை காவலர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது, அங்கிருந்த 8 பேர் போலீசாரை கண்டவுடன் பி.ஒய் 05 விஇ 0753 பதிவெண் கொண்ட காரில் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார், காரை சோதனை செய்தனர். அதில், 3 கிலோ 249 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கொடாத்துார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகையன் மகன் ஸ்ரீகாந்த், 24; பொறையூர், மாரியம்மன் கோவில் தெரு முருகையன் மகன் முகேஷ், 29; ராமநாதபுரம், முருகன் கோவில் தெரு மதிவாணன் மகன் மதன்குமார், 26; மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை, கிழக்கு வீதி ராமலிங்கம் மகன் ரங்கராஜ்,29; வழுதாவூர், மாரியம்மன் கோவில் வீதி மூர்த்தி மகன் முகிலன், 28; திண்டிவனம், ஓலக்கூர், குளக்கரை வீதி ராஜவேலு மகன் விக்னேஷ் (எ) தவமணி,27; வழுதாவூர், விடுதி வீதி கலியபெருமாள் மகன் வினித்,23; ராமதாஸ் மகன் ராம்குமார், 23, என, தெரியவந்தது.

அவர்களிடம் இருந்த 3 கிலோ 249 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரெனால்ட் டிரிபர் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

இவர்களில் ரவுடிகளான முகிலன், முகேஷ், ரங்கராஜ், ராம்குமார், வினித் ஆகியோர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, வெடிகுண்டு வீசியது உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 பேர் கைது

இதேபோல், சேதராப்பட்டு தனியார் கம்பெனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் கர், 26; மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ரோடன் லாமா,27; லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ராஜேஷ், 23; ஆகியோரை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 260 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மூன்று மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us