தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்று சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 11,204 மாணவர்கள் பங்கேற்பு

 இன்று சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 11,204 மாணவர்கள் பங்கேற்பு

 இன்று சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 11,204 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : பிப் 17, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இன்று துவங்கும் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பில் 5,638 மாணவர்களும், பிளஸ் 2 வில் 5,566 மாணவர்களும் எழுதுகின்றனர்.

சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. அதில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 122 அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் 5,638 மாணவ மாணவிகளும், 60 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 5,566 மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதுகின்றனர்.

இவர்களுக்காக புதுச்சேரியில் 25, காரைக்காலில் 8, ஏனாம் மற்றும் மாகியில் தலா 2 என மொத்தம் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு பணிகளை கண்காணிக்க மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட் கொண்டு வரவேண்டும். மொபைல் போன் கொண்டு வரக்கூடாது. தேர்வறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்கள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி எச்சரித்துள்ளார்.

பிளஸ் 2விற்கு 20ம் தேதி துவக்கம்

சி.பி.எஸ்.இ., பாடப் பிரிவில், நாடு முழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கினாலும், புதுச்சேரி மாநிலத்தில் இன்று 10ம் வகுப்பு மாணவர்கள் கணிதத் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பயோ டெக்னாலஜி மற்றும் சுருக்கெழுத்து பாடத் தேர்வுகள் நடக்கிறது. இப்பாட பிரிவுகள் புதுச்சேரியில் கிடையாது. நாளை 18ம் தேதி விருப்ப பாடமான உடற்கல்வி தேர்வு நடக்கிறது. பிரதான தேர்வுகள் வரும் 20ம் தேதி முதல் துவங்குகிறது. அன்று இயற்பியல் பாடத் தேர்வு நடக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us