/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்தியாவில் 1.20 கோடி பேருக்கு கண் நீரழுத்த நோய் பாதிப்பு புதுச்சேரி மாநாட்டில் தகவல்
/
இந்தியாவில் 1.20 கோடி பேருக்கு கண் நீரழுத்த நோய் பாதிப்பு புதுச்சேரி மாநாட்டில் தகவல்
இந்தியாவில் 1.20 கோடி பேருக்கு கண் நீரழுத்த நோய் பாதிப்பு புதுச்சேரி மாநாட்டில் தகவல்
இந்தியாவில் 1.20 கோடி பேருக்கு கண் நீரழுத்த நோய் பாதிப்பு புதுச்சேரி மாநாட்டில் தகவல்
ADDED : செப் 29, 2024 06:36 AM

புதுச்சேரி : இந்தியாவில் 1.20 கோடி பேர் கண் நீரழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீத பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதே தெரியாது என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அகில இந்திய கண் நீரழுத்த நோய் மருத்துவர்கள் சங்கத்தின் 33வது மூன்று நாள் தேசிய மாநாடு புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் துவங்கியது. மாநாட்டை முன்னாள் கவர்னர் கிரண்பேடி துவக்கி வைத்தார்.
மாநாடு குறித்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி வெங்கடேஷ் கூறியதாவது:
கண் நீர் அழுத்த நோய் நோய் என்பது உலக அளவில் பார்வை இழப்பிற்கு இரண்டாவது காரணமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டிற்கு 1.20 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பாதிப்பு குறித்து 90 சதவீத பேருக்கு தெரிவதே இல்லை. இது ஒரு சத்தம் இல்லாத பார்வை திருடன்.
கண் நீர் அழுத்த நோய், எவ்வித அறிகுறியின்றி கண்களை மூளையுடன் இணைக்கும் பார்வை நரம்புகளை பாதிக்கின்றது. அதனால் 40 வயதை கடந்தவர்கள் கண் நீர் அழுத்த நோய் குறித்த பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பார்வையைத் திருடும் இந்த வியாதி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்நோயை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து கருத்ரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் கண்ணீர் அழுத்த நோயின் சிகிச்சையை மேம்படுத்தும் அணுகுமுறைகள் குறித்து மாநாட்டில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
நாடு முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் லண்டனில் இருந்து 6 சர்வதேச நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு இன்று நிறைவடைகிறது.
கிரண்பேடி பாராட்டு
முன்னாள் கவர்னர் கிரண்பேடி பேசுகையில், 'நான் இங்கு மீண்டும் நிற்பதற்கு டாக்டர் வெங்கடேஷ் தான் காரணம். அழைப்பிதழ் கிடைத்ததும், புதுச்சேரிக்கு மீண்டும் வந்துவிட்டேன். அவரின் கண்தான விழிப்புணர்வு சேவை அளப்பரியது. பாராட்டுக்குரியது' என்றார்.