/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக் அதாலத்தில் 1,232 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக் அதாலத்தில் 1,232 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : டிச 15, 2024 06:10 AM

புதுச்சேரி,: புதுச்சேரி மாநிலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், ஆயிரத்து 232 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், 6 அமர்வுகளையும், சட்டப்பணிகள் ஆணையத்தில், 1 அமர்வையும் தலைமை நீதிபதி ஆனந்த் மற்றும் உறுப்பினர் செயலர் அம்பிகா மேற்பார்வையிட்டனர். அதேபோல, காரைக்கால் மாவட்டம் மற்றும் மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதலாத்து நடந்தது. காரைக்கால் - 6; மாகி - 2 ஏனாம் - 1; என மொத்தம், 16 அமர்வுகள் செயல்பட்டன.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் நேரடி வழக்குகள், 6 ஆயிரத்து 191 எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆயிரத்து 232 வழக்குகள் முடிக்கப்பட்டு, 6 கோடியே, 90 லட்சத்து, 23 ஆயிரத்து, 778 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டன. இவற்றில் நீதிமன்ற நிலுவையில் இருந்த, ஆயிரத்து 51 வழக்குகள் முடிக்கப்பட்டன.
காரைக்கால்: காரைக்காலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த லோக் அதாலத்தில், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 1079 வழக்குகளில் 267 வழக்குகள் எடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது.
வழக்குகளை மாவட்ட நீதிபதி செம்மல் தலைமையில் நீதிபதிகள் ராஜசேகரன், பழனி, நீதிபதிகள் வரதராஜன், லிசி ஆகியோர் விசாரித்தனர்.