ADDED : நவ 23, 2026 09:59 PM
லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இ.சி.ஆரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவு நீர் உந்து நிலையம் அருகில் குடிபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை விக்னேஷ்,40; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீசார் பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தனியார் சோப்பு கம்பெனி பின்புறம் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சேதராப்பட்டு சக்திவேல் மகன் புகழ்,20; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ஐ.டி.ஐ., சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, களம்காத்த மாரியம்மன் கோவில் அருகில் ரகளையில் ஈடுபட்ட பூத்துறை சத்யராஜ்,41; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் தக்ககுட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு குடிபோதையில் ரகளை செய்த மூலகுளம் ஆரோக்கியதாஸ்,46; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதேபோல், கனகன் ஏரிக்கரையில் குடிபோதையில் ரகளை செய்த சண்முகாபுரம் அறிவழகன்,33; ரெட்டியார்பாளையம் ராஜகணேஷ்,47; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் பாரதிதாசன் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த சரவணன், 45; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் கணகசெட்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளை செய்த பண்ருட்டி கடாம்புலியூர் சுரேஷ்,42; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் உப்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எக்ஸ்போ மைதானத்தில் குடிபோதையில் ரகளை செய்த அரியாங்குப்பம் செந்தில்குமார்,41; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நுாறடி சாலை பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு குடிபோதையில் ரகளை செய்த முதலியார்பேட்டை விஜி,43; ஐயங்குட்டிப்பாளையம் செல்வராஜ்,38; ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
ஏனாம் போலீசார் நேற்று முன்தினம் தரியலத்திப்பா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளை செய்த பைவரபெலம் பெம்மாடி லோவரஜூ,33; பைபாஸ் சாலையில் ரகளை செய்த கோத்தபள்ளி வனுமு சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
