தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளையில் ஈடுபட்ட 13 பேர் கைது

ரகளையில் ஈடுபட்ட 13 பேர் கைது

ரகளையில் ஈடுபட்ட 13 பேர் கைது


ADDED : நவ 11, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீசார் தொழிற்பேட்டையில் நேற்று (நவ.,10) ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரப்பாளையம் சிலம்பரசன்,23; என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், ஐப்பன் கோவில் எதிரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சண்முகாபுரம் விஜயபிரசாந்த்,46; என்பவரை கைது செய்தனர்.

ரெட்டியார்பாயைம் போலீசார் நேற்று மேரி உழவர்கரை பகுதியில் ரோந்து சென்றனர். குண்டு சாலை பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கதிர்காமம் விஜயகுமார்,44; ரெட்டியார்பாளையம் பாஸ்கர்,45; ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல், மூலகுளம் ஜெ.ஜெ., நகர் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட புதுச்சேரி ஹரிஷ்,21; டி.என்.பாளையம் நித்திஷ்,21, ஆகியோரை கைது செய்தனர்.

பெரியகடை போலீசார் ரங்கப்பிள்ளை வீதியில் ரோந்து சென்றனர். தனியார் பார் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சிங்கிரிகுடி ராஜவேலு,42; என்பவரை கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீசார் நேற்று பெரியகாலாப்பட்டு கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வானுார் நிஷாந்தன்,26; அந்தோணிராஜ்,31; ஆகியோரை கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று அண்ணா திடல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட புதுச்சேரி ஸ்ரீராம்,36; என்பவரை கைது செய்தனர்.

உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட புதுச்சேரி குராம்,46; என்பவரை கைது செய்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் நேற்று ஒத்தவாடை வீதியில் ரோந்து சென்றனர். தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கரிக்கலாம்பாக்கம் புஷ்பநாதன்,32; என்பவரை கைது செய்தனர்.

தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நைனார்மண்டபம் ராஜேஷ்,37, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us