/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 13 பேர் ரூ.2.20 கோடியை இழந்தனர்
/
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 13 பேர் ரூ.2.20 கோடியை இழந்தனர்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 13 பேர் ரூ.2.20 கோடியை இழந்தனர்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 13 பேர் ரூ.2.20 கோடியை இழந்தனர்
ADDED : டிச 07, 2024 07:18 AM
புதுச்சேரி: முன்னாள் ராணுவ வீரர் உட்பட 13 பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 2 கோடியே 20 லட்சம் ரூபாயை இழந்தனர்.
மூலகுளம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அசோகன், 63; முன்னாள் ராணுவ வீரர். இவரது உறவினர் மூலம் ஈரோட்டை சேர்ந்த விஜயன் அறிமுகமானார்.
விஜயன் கோயம்புத்துாரை தலைமையிடமாக கொண்ட தனியார் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார். இதைநம்பி, அசோகன் கடந்த 2021ம் ஆண்டு முதல் பல்வேறு தவணையாக, 98 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார்.
அதற்கு, லாப தொகையாக 7 கோடியே 21 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் காட்டியது. அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்த தேவி சீனிவாசன் 20 லட்சம், ரவிக்குமார் 3 லட்சம், ஹரி 8 லட்சம், அன்பு 80 ஆயிரம், ரமேஷ் 38 லட்சம், பிரவீன் அலெக்சாண்டர் 6 லட்சம், தெய்வீகம் 3 லட்சம், அர்ஜூனன் 4 லட்சம், கிருஷ்ணன் 1 லட்சத்து 44 ஆயிரம், கலைசெல்வன் 5 லட்சம், ஸ்டாலின் 21 லட்சம், சுதாகர் 12 லட்சம் என, 13 பேர் 2 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து இழந்துள்ளனர்.
இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.