ADDED : மார் 05, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணியாணை நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது.இதனையடுத்து 140 செவிலியர்களை சுகாதாரத் துறை இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு 53 செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பிராந்தியத்திற்குள் 75 செவிலியர்களும், காரைக்கால் பிராந்தியதிற்குள் 12 செவிலியர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவினை சுகாதாரத் துறை சிறப்பு பணி அதிகாரி மரி ஜோசப்பின் சித்ரா பிறப்பித்துள்ளார்.

