ADDED : மார் 18, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி விதிகளை மீறி கொண்டு சென்ற 144 லிட்டர் மதுபானங்களை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை யொட்டி, கலால் துறை ஆணையர் விக்ராந்த் ராஜா, துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோர் உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையில் கலால்துறை ஊழியர்கள் புதுச்சேரியில் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விதிகளை மீறி வைத்திருந்த மற்றும் கள்ளத்தனமாக எடுத்து செல்லப்பட்ட ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான 144 லிட்டர் மதுபான வகைகளை கைப்பற்றினர். கடந்த ஒரு வாரத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுபான வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
