ADDED : ஜன 30, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 9ம் நாள் உடற்தகுதி தேர்வில் 149 பேர் தேர்ச்சி பெற்றனர்.
போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 481 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆண்கள் பிரிவில் 12 ஆயிரத்து 378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 9ம் நாளான நேற்று ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். அதில் 362 பேர் பங்கேற்று, 149பேர் தேர்ச்சி பெற்றனர்.
