/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி கல்லுாரிகளுக்கு இம்மாதம் 15 நாள் விடுமுறை
/
பள்ளி கல்லுாரிகளுக்கு இம்மாதம் 15 நாள் விடுமுறை
ADDED : ஜன 19, 2024 11:00 PM
புதுச்சேரி,- புதுச்சேரியில் இம்மாதத்தில் மட்டும் 15 நாட்கள் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.
ஜனவரியில் மொத்தம் 23 நாட்கள் மட்டுமே பணி நாட்கள். 8 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். பணி நாட்களில் புத்தாண்டு 1 நாள், கன மழை காரணமாக பள்ளி, கல்லுாரிக்கு மட்டும் 8ம் தேதி, பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள், ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறை, 26ல் குடியரசு தினம், என அரசு அலுவலகங்களுக்கு 6 நாட்களும், பள்ளி, கல்லுாரிகளுக்கு 7 நாட்களும் விடுமுறை கிடைத்தது. சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறை சேர்த்தால் இம்மாதத்தில் அரசு அலுவலகங்களுக்கு மொத்தம் 14 நாட்களும், பள்ளி கல்லுாரிகளுக்கு 15 நாட்களும் விடுமுறை கிடைத்துள்ளது.
இன்னும் ஜனவரி மாதம் முடியவில்லை. அதற்குள் மழை ஏற்பட்டால் விடுமுறை நாட்கள் எண்ணிக்கை இன்னும் கூடும். காரைக்காலில் கார்னிவல் விழாவுக்காக கடந்த 18 ம் தேதி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில், பள்ளி கல்லுாரிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.