15 தி.மு.க., வேட்பாளர் ரங்கன் கிராமங்களில் ஓட்டு சேகரிப்பு
15 தி.மு.க., வேட்பாளர் ரங்கன் கிராமங்களில் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 10:56 PM

புதுச்சேரி: மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிராமம், கிராமமாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மங்கலம் சட்டசபை தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிவராந்தகம் ரங்கன் கீழூர், சிவராந்தகம், மேல்சாத்தமங்கலம், கீழ் சாத்தமங்கலம் கிராமங்களில் ஓட்டு சேகரித்து வருகிறார்.
ஒவ்வொரு கிராமத்திலும் தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிளோடு வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வரும் ரங்கன், தொகுதிக்கு தேவையான சுகாதாரமான குடிநீர், தடையில்லா மின்சாரம், தரமான சாலைவசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன். தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை புதுச்சேரிக்கும் கொண்டுவர பாடுபடுவோம் என்று வாக்காளர்கள் மத்தியில் உறுதியளித்து ஓட்டு சேகரித்தார்.
ஓட்டு சேகரிப்பின்போது, வேட்பாளரின் மகள் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், அவைத் தலைவர் புஷ்பா, தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ஸ்ரீஹரி, முரளி, அய்யனார், கல்யாண் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
