/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைப்பட்டா வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய 15 பேர் கைது
/
மனைப்பட்டா வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய 15 பேர் கைது
மனைப்பட்டா வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய 15 பேர் கைது
மனைப்பட்டா வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறிய 15 பேர் கைது
ADDED : நவ 18, 2025 05:32 AM

புதுச்சேரி: மனைபட்டா வழங்ககோரி, கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை விரிவாக்க பணிக்காக செட்டிகுளம் பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொதுப் பணி மற்றும் கொம்யூன் அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் இடித்து அகற்றினர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றலில் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடம் இலவச மனைப்பட்டா கோரி வந்தனர். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றலில் வீடுகளை இழந்த 8 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மனைப்பட்ட வழங்க கோரி நேற்று காலை 10 மணிக்க, புதுச்சேரியில், வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி, படுக்கை மற்றும் பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம், தாசில்தார் பிரித்திவி தலைமையிலான வருவாய் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்திலேயே மனைப்பட்டா வழங்க கோரினர். அதற்கு மறுத்த அதிகாரிகள், மாற்று இடத்தில் வழங்க கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்ததால், டி நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோரை கைது செய்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

