/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் காடுகளை மீட்டெடுக்க 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன ஒரே நேரத்தில் 1000 பேர் கைகோர்ப்பு

ADDED : டிச 20, 2025 06:32 AM

புதுச்சேரி: திருவாண்டர் கோவிலில், 1,500 அரிய வகை மரக்கன்றுகள், கோவில்காடுகளை மீட்டெடுக்க நடப்பட்டன.
புதுச்சேரியின் பசுமைப் பரப்பை அதிகரிக்க கோவில் காடுகள் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை புதுச்சேரி மாசுக்கட்டுபாட்டு குழுமம் செயல்படுத்தி வருகிறது. இதன்படி மங்கலம், திருக்காஞ்சி கோவில்களில் தலா 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக திருவாண்டார் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவிலில் 1,500 மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், இந்து அறநிலையத் துறை இணைந்து, திருவண்டார்கோவில் லுாகாஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 1,500 அரிய வகை மரக்கன்றுகளை நடப்பட்டன. ஊழியர்கள், மாணவர்கள் என 1,000 பேர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், தெற்கு சப் கலெக்டர் குமரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மரக்கன்று செழித்து வளர்வதற்காக பிரத்யேக ஆழ்குழாய் கிணறு அமைத்து சொட்டு நீர் பாசன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.