/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா
/
வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா
ADDED : நவ 09, 2025 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் வந்தே மாதரம் தேச பக்தி பாடலின் 150வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.
இதில், லிங்காரெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 'வந்தே மாதரம் தேச பக்தி பாடலை பாடினர்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் வேலைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோல், திருக்கனுார், ரெட்டிப்பாளையம், பெரியக்கடை உள்ளிட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா நடந்தது.

