தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதலியார்பேட்டை வள்ளலார் மடத்தில் 155வது ஆண்டு தைப்பூச விழா

 முதலியார்பேட்டை வள்ளலார் மடத்தில் 155வது ஆண்டு தைப்பூச விழா

 முதலியார்பேட்டை வள்ளலார் மடத்தில் 155வது ஆண்டு தைப்பூச விழா


ADDED : ஜன 20, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் 155வது ஆண்டு தைப்பூசம் மற்றும் சங்கத்தின் 77 ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 1ம் தேதி நடக்கிறது.

விழாவையொட்டி, வரும் 31ம் தேதி காலை 7 மணிக்கு சத்திய ஞானக கொடி உயர்த்துதல் நடக்கிறது. சங்கத்தின் பொறுப்பு தலைவர் ஜெகநாதன் கொடி உயர்த்துகிறார். சட்ட ஆலோசகர் ராமமூர்த்தி தலைமை தாங்குகிறார். முதலியார் பேட்டை வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் திருவேங்கடம் முன்னிலை வகிக்கிறார்.

காலை 7:30 மணிக்கு வள்ளலார் உருவப்பட ஊர்வலத்தை தலைமை சன்மார்க்க கூட்டமைப்பு தலைவர் கணேசன் துவக்கி வைக்கிறார். வடலுார் தலைமை சங்கத்தின் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் ஜான்குமார், சம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்ளிட்ட ப லர் கலந்து கொள்கின்றனர்.

காலை 11 மணிக்கு வீணை இசை நிகழ்ச்சி, 12 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 1 தேதி காலை 8 மணிக்கு 7 திரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு கருத்தரங்கம், பகல் 1 மணிக்கு ஜோதி தரிசனம், மாலை 6 மணிக்கு யோகா- யோகாவில் பரதநாட்டியம், இரவு 7 மணிக்கு பரிசளிப்பு நடக்கிறது இரவு 7:30 மணிக்கு 7 திரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடக்கிறது.

ஏற்பாடுகளை சங்க பொறுப்புத் தலைவர் ஜெகநாதன், கோபாலகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் சஜிதா கோபாலகிருஷ்ணன், துணைப் பொறுப்பு தலைவர்கள் சரவணன், செல்வநாதன் மற்றும் சபை பொறுப்பாளர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us