தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் 1,592 பேர் பயன் பெற்றனர்

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் 1,592 பேர் பயன் பெற்றனர்

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில் 1,592 பேர் பயன் பெற்றனர்


ADDED : ஜன 02, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, ; வளர்ச்சியடைந்த பாரதம் நமது லட்சியம் வாகன பயணத்தையொட்டி உழவர்கரை நகராட்சி பகுதிகளில் நடந்த 25 நிகழ்ச்சிகளில் 8,000 பேர் பங்கேற்றனர்.

இது குறித்து மத்திய பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட விழிப்புணர்வு வாகன பயணத்தை மத்திய இணையமைச்சர் முருகன் துவங்கி வைத்தார்.தொடர்ந்து 31ம் தேதி ஆலங்குப்பத்தில் பயணம் நிறைவடைந்தது.

நகர் பகுதியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அதிகபட்சமாக 1260 பேர் பயன் பெற்றுள்ளனர். 113 பேர் உஜ்வாலா திட்டத்தின் கீழும், 91 பேர் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழும், 35 பேர் பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழும், 5 பேர் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் என 17 மத்திய அரசின் திட்டங்ளில் 1,592 பேர் பலன் பெற்றனர்.

இந்த 25 நிகழ்ச்சிகளிலும் உள்ளூர் விளையாட்டு வீரர்களும் சாதனை புரிந்த மகளிரும் பாராட்டப்பட்டனர். இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு போன்றவற்றை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அறிகுறி உள்ளவர்களுக்கு காச நோய் பரிசோதனையும் செய்யப்பட்டது. சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சியும் நடந்தது. 2024-ம் ஆண்டிற்கான 5,000 காலண்டர்கள் இந்த நிகழ்ச்சிகளில் விநியோகிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us