தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/லாஸ்பேட்டை மைதானத்தில் 15வது டி 20 கிரிக்கெட் போட்டி

லாஸ்பேட்டை மைதானத்தில் 15வது டி 20 கிரிக்கெட் போட்டி

லாஸ்பேட்டை மைதானத்தில் 15வது டி 20 கிரிக்கெட் போட்டி


ADDED : ஜன 02, 2024 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 07:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் அசோசியேஷன் சார்பில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக லாஸ்பேட்டை மைதானத்தில் 15 வது டி 20 கிரிக்கெட் போட்டி நடத்தி வருகிறது.

போட்டியை லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்திய நாராயணா, தமிழ்நாடு முன்னாள் சீனியர் கிரிக்கெட் தேர்வு குழுத் தலைவர் ஸ்ரீதர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

கடந்த 31ம் தேதி, நடந்த 13 வது போட்டியில் ஜிப்மர் இன்வின்சிபில் அணியும், லெவன் கிங்ஸ் கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் ஜிப்மர் கிரிக்கெட் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்தது.

அந்த அணியின் நற்சிலால் மீனா 61 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 107 ரன்களை குவித்தார். விக்கி 37 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 61 ரன்களை எடுத்தார். ராஜா 2 விக்கெட்களை எடுத்தார்.

பிறகு விளையாடிய லெவன் கிங்ஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சுதர்சன் 38 ரன்கள், ராஜா 29 ரன்களும் எடுத்தனர். தீபக் 3 விக்கெட்டுகளும், ஸ்ரேயஸ், ஜித்தின் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். ஜிப்மர் கிரிக்கெட் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14வது போட்டியில் சோழன் கிரிக்கெட் அணியும் ,அம்பேத்கர் கிரிக்கெட் அணியும் மோதியது. சோழன் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சுரேஷ் 61 ரன்களும், பொற்செல்வம் 47 ரன்களும் எடுத்தனர். சச்சின் 3 விக்கெட்களும், சிவகுமார் 2 விக்கெட்களும் எடுத்தனர். பின் களம் இறங்கிய அம்பேத்கர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்தது. அந்த அணியின் சச்சின் 54 ரன்களும், முருகன் 36 ரன்களும் எடுத்தனர். சுரேஷ் இரண்டு விக்கெட்கள் எடுத்தார். சோழன் கிரிக்கெட் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

15வது போட்டியில் இமயம் கிரிக்கெட் அணியும், நைட் வாரீயர் கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் களம் இறங்கிய இமயம் கிரிக்கெட் அணி 18 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் ஜெயபால் 33 ரன்களும், செல்வம் 31 ரன்களும் எடுத்தனர். மணி, அரவிந்த் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். பின் களம் இறங்கிய நைட் வாரியர் கிரிக்கெட் 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மணி 50 ரன்கள் எடுத்தார். இமயம் கிரிக்கெட் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

16வது போட்டியில் சோழன் கிரிக்கெட் அணியும், இமயம் கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் சோழன் கிரிக்கெட் அணி 17 ஓவர்களில் 10 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பாரத் 39 ரன்களும், சோமு 24 ரன்களும் எடுத்தனர். முரளி 3 விக்கெட்கள், கலை மற்றும் துரை தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். பின் களம் இறங்கிய இமயம் கிரிக்கெட் அணி 16 ஓவர்களில் 10 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் செல்வம் 49 ரன்கள் எடுத்தார்.சுரேஷ் 4 விக்கெட்டுகளும், யோகராஜன் 3 விக்கெட்களும் எடுத்தனர். சோழன் கிரிக்கெட் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த 17வது போட்டியில் அன்னை ராணி கிரிக்கெட் அணியும், தளபதி கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் தளபதி கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விஸ்வா 61 ரன்கள் எடுத்தார்.

தினேஷ் 3 விக்கெட்கள் எடுத்தார். பின் களமிறங்கிய அன்னை ராணி கிரிக்கெட் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மோகன் 54 பந்துகளில் 14 பவுண்டரிகள், 5 சிக்ஸ்ர்கள் உட்பட 102 ரன்களை குவித்தார். அன்னை ராணி கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்பாடுகளை சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ், அரவிந்த் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us