16 பிள்ளையார்குப்பம் கிராமத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
16 பிள்ளையார்குப்பம் கிராமத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 10:59 PM

புதுச்சேரி: ஏம்பலம்(தனி) தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் வீடு, வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
நேற்று காலை பிள்ளையார்குப்பத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது தான் வெற்றி பெற்றதும், பிள்ளையார்குப்பத்திற்கு என தனியாக விளையாட்டு திடல், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம், மின்துறை மூலம் 2016ம் ஆண்டு அமைத்த புதைவட கம்பிகளை மாற்றி, மின் தடை ஏற்படுவதை தடுப்பேன். ஓம்சக்தி நகருக்கு முழுமையான சாலை வசதி, திருப்பதி பாலாஜி நகருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.
பிரஞ்சு ஆட்சியில் 1960ம் ஆண்டு கட்டப்பட்ட வானொலி நிலையத்தை பழமை மாறாமல் அதே இடத்தில் நினைவு சின்னமாக கட்டிதரப்படும். இப்பகுதிக்கு நவீன சமுதாய நலக்கூடம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செய்து வரும் என்.ஆர்.காங்., அரசு மீண்டும் மலர ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய கேட்டுக் கொண்டார்.
