/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1.64 கோடி மானியம்
/
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1.64 கோடி மானியம்
ADDED : பிப் 28, 2024 11:06 PM

புதுச்சேரி: கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையானது, கரும்புப் பயிர் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கி கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்க தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில் 2022--23ம் ஆண்டு 1597.83 ஏக்கரில் கரும்பு பயிர் சாகுபடி செய்த 709 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.1,59,78,300 கோடி மற்றும் 42.85 ஏக்கரில் கருப்பு பயிர் சாகுபடி செய்த 31 அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.11,000 வீதம் ரூ.4,71,350 கோடி உற்பத்தி மானியம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று நடந்தது.
முதல்வர் ரங்கசாமி 1,64,49,650 கோடி ரூபாய் உற்பத்தி மானியம் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இந்தத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது. சபாநாயகர் செல்வம்,வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், துறை இயக்குனர் வசந்தகுமார் உடனிருந்தனர்.

