/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்திரையர்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.66 கோடி முறைகேடு
/
முத்திரையர்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.66 கோடி முறைகேடு
முத்திரையர்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.66 கோடி முறைகேடு
முத்திரையர்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.66 கோடி முறைகேடு
ADDED : அக் 24, 2024 05:55 AM
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், ரூ.1.66 கோடி முறைகேடு செய்த கூடுதல் நிர்வாக இயக்குனர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, முத்திரையர்பாளையத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக கூட்டுறவு சங்கத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடேசன், கூட்டுறவு பதிவாளர் சந்திரசேகரன், சீனியர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் குழு அமைத்து புகார்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சங்கத்தின் கூடுதல் நிர்வாக இயக்குனராக மேகநாதன் இருந்தபோது, பயனாளிகளுக்கு கடன் வழங்கிய வகையில் சுமார் ரூ. 1.66 கோடி முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடேசன், புதுச்சேரி விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மேகநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

