/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பிஸ்கெட் கம்பெனியில் போராட்டம் நடத்திய 18 பேர் கைது
/
தனியார் பிஸ்கெட் கம்பெனியில் போராட்டம் நடத்திய 18 பேர் கைது
தனியார் பிஸ்கெட் கம்பெனியில் போராட்டம் நடத்திய 18 பேர் கைது
தனியார் பிஸ்கெட் கம்பெனியில் போராட்டம் நடத்திய 18 பேர் கைது
ADDED : மார் 10, 2024 06:36 AM

வானுார் : தனியார் பிஸ்கெட் கம்பெனியில் பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 18 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே தனியார் பிஸ்கெட் கம்பெனி இயங்கி வருகிறது. இக்கம்பெனியில் 150க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 350க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களும் பணிபுரிகின்றனர்.
இங்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளன.
இந்நிலையில், கம்பெனியில் பணிபுரியும் ராவுத்தன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், தே.மு.தி.க., தொழிற்சங்கத்தை துவங்கி, கம்பெனியில் பதிவு செய்யவும், மேலும், 12 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டம் நடத்தினார். அதனையொட்டி கம்பெனி நிர்வாகம் கடந்த 15ம் தேதி ஜெய்சங்கரை தற்காலிக பணி நீக்கம் செய்தது.
இதனைக் கண்டித்தும், 12 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தே.மு.தி.க., சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 9:30 மணிக்கு, ஜெய்சங்கர் தலைமையில் 18 பேர் கம்பெனிக்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை வானுார் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை 6 மணிக்கு விடுவித்தனர்.

