தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் 18வது ஆண்டு விழா

குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் 18வது ஆண்டு விழா

குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் 18வது ஆண்டு விழா


ADDED : பிப் 14, 2024 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 03:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கோரிமேடு குரு நகரில் உள்ள குருகுலம் மேல்நிலைப் பள்ளியின் 18 ம் ஆண்டு விழா, கம்பன் கலையரங்கில் நடந்தது.

பள்ளி நிர்வாகி கேப்டன் ராஜிவ்குமார் ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் அருள்செல்வி ராஜேந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். எஸ்.பி., மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கும், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் குழு நடனம், யோக மற்றும் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி துணை முதல்வர் சாந்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us