19 மணவெளி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
19 மணவெளி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 29, 2026 11:03 PM

புதுச்சேரி: மணவெளி சட்டசபை தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம் பூரணாங்குப்பத்தில் நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, வேட்பாளர் செல்வம், மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்தார், இந்த பகுதிக்கு புதிய சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுப்பேன். விவசாயிகள் மற்றும் மீனவ மக்களின் நலன் கருதி புதிய மார்க்கெட் கட்டிக் கொடுக்கப்படும். இந்த கிராமத்தில் புதியதாக ஆரம்ப சுகாதார துணை நிலையம் கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
மேலும் இப்பகுதிக்கு தான் எம்.எல்.ஏ., தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், தொகுதிக்கு தொடர்ந்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். ரூ.1.88 கோடி மதிப்பில் பூரணாங்குப்பம் முதல் புதுக்குப்பம் வரை வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது. ரூ.3 கோடி மதிப்பில் கடலுார் சாலை முதல் புதுகுப்பம் வரை புதிய தார் சாலை போடப்பட்டது. கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் சிமென்ட் மற்றும் தார் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
குறைந்த மின் அழுத்தத்தை போக்க புதிய மின்மாற்றிகள் மாற்றப்பட்டது. 240 பேருக்கு முதியோர், விதவை உதவித் தொகை, 228 பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை பெற்றுத் தரப்பட்டதை எடுத்து கூறி ஓட்டு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.,- என்.ஆர்.காங்., -அ.தி.மு.க., -பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
