தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்காள பரமேஸ்வரி கோவிலில் 19ம் ஆண்டு பால்குட ஊர்வலம்

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் 19ம் ஆண்டு பால்குட ஊர்வலம்

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் 19ம் ஆண்டு பால்குட ஊர்வலம்


ADDED : ஏப் 17, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 19ம் ஆண்டு பால்குட அபிஷேகம் மற்றும் சித்திரை அமாவாசை பெருவிழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் அலகு போடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7:15 மணிக்கு வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர். மாடவீதிகள் வழியாக சென்று பால்குட ஊர்வலம், பின், கோவிலையடைந்தது.

11:30 மணிக்கு மூலவர் அம்மனுக்குப் பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:30 மணிக்கு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us