ADDED : பிப் 19, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : சோரியாங்குப்பம் மேம்பாலத்தில், ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சோரியாங்குப்பம், புதிய பாலத்தில் இருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், கடலூர் கே.என். பேட்டையை சேர்ந்த ராஜசேகர், 31; கடலூர் சாவடி பகுதியைச் சேர்ந்த சதீஷ, 28; என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.