ADDED : டிச 19, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். முள்ளோடை சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தர்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பிரபு 35; என, தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கன்னியக்கோவிலில் சந்திப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் புதுப்பாளைத்தை சேர்ந்த பிரசாந்த் (எ) பிரசாந்த்குமார் 22; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

