/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
/
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
ADDED : டிச 12, 2024 06:24 AM
புதுச்சேரி: சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்து 595 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். தாவீதுபேட் கல்லறை வீதி, பில்லுக்கடை சந்திப்பு அருகே சிலர் கஞ்சா விற்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் இருந்து தகவல் கிடைத்தது.
ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் (பொ) கணேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் இரு வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி, விசாரித்தனர். வாணரப்பேட்டை ராசு உடையார்தோட்டம் முகிலன், 21; வரதராஜன், 23; என தெரியவந்தது.
இருவரிடம் நடத்திய சோதனையில், சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் கஞ்சா மறைத்து வைத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இருவரிடம் இருந்து 595 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.