ADDED : மார் 26, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பாரதி நகரில் பள்ளி மாணவர்களை குறி வைத்து, கஞ்சா விற்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் அந்த இடத்தில் சோதனை செய்தனர்.
அங்கு சந்தேகமான முறையில் நின்ற இருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அரியாங்குப்பம் சீனிவாச நகரை கோவிந்தராஜ், 22; மற்றொருவர் அரியாங்குப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவிந்தராஜை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை அரியாங்குப்பம் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
