/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
/
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
ADDED : ஜன 01, 2024 05:49 AM

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் ஏரிக்கரை பகுதியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து, சோதனை நடத்தியதில், அவர்களிடம் 237 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
விசாரணையில், சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த ஆனந்தன், 61; அனுமந்தை குப்பம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரதீப்ராஜ், 24;என்பது தெரியவந்தது.
இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.