ADDED : ஜன 02, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் போலீசார் பழனிசாமி, ரமேஷ் ஆகியோர் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தே கம்படும்படி நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து, சோதனை செய்ததில் 75 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். விசாரணையில் தமிழகப் பகுதியான பகண்டை அம்பேத்கர் வீதி ராஜேஷ், 24; மாரியம்மன் கோவில் தெரு தமிழ்செல்வன், 19; என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

