/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
/
சிறப்பு எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
சிறப்பு எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
சிறப்பு எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
ADDED : ஜன 16, 2025 03:43 AM
கோட்டக்குப்பம், : ரோந்து சென்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கீழ்புத்துப்பட்டு பகுதியில் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் அன்பு ஆகியோரை எச்சரித்தனர்.
அதிக போதையில் இருந்த இரண்டு பேரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிந்து, சத்தியமூர்த்தி, அன்பு ஆகிய இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட இருவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.